Reported Journalist: Zamil Shafeek

மக்கொனை அஹதிய்யா அறநெறிப் பாடசாலையின் 25ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெறும் “வெள்ளிவிழா” நிகழ்வு, எதிர்வரும் ஜூன் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 6.30 மணி வரை மக்கொனை அல்ஹஸனியா மஹா வித்தியாலய பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
விழாவில் தற்போது பணியாற்றும் 25 ஆசிரியர்களும், கடந்த ஆண்டுகளில் சேவையாற்றிய 10 ஆசிரியர்களும், 15 அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும் கௌரவிக்கப்படவுள்ளதுடன், போட்டிகளில் வெற்றி பெற்ற 19 மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.
மேலும், 25ஆம் ஆண்டு வெள்ளிவிழா நினைவு மலரான “ரிஹ்லத் அன் நூர்” வெளியிடப்படவுள்ளமை நிகழ்வின் சிறப்பம்சமாகும்.பேருவளை ஜாமியா நளீமியா கலாபீட முதல்வர் அஷ்-ஷேக் ஏ.சி. அகார் முஹம்மட் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளதுடன், பல மத, கல்வி மற்றும் சமூக முக்கியஸ்தர்களும் நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.
இந்நிகழ்வுக்கு அஹதிய்யா அதிபர் அல்ஹாஜ் ஜே.எம்.எம். உவைஸ் தலைமை தாங்கவுள்ளார் என பாடசாலை செயலாளர் ஜிப்ரியா இப்றாஹிம் தெரிவித்துள்ளார்.













Discussion about this post