
சவூதி அரேபியாவின் ஜித்தா நகரத்திற்கான இலங்கை கவுன்சிலர் ஜெனரல் பதவிக்கு, ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் லஃபார் தாஹிர் அவர்கள் நியமிக்கப்படுவதாக வெளிவிவகார அமைச்சு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முன்னதாக, ஜித்தாவிற்கான இலங்கை பிரதிநிதியாக முஸ்லிம் அல்லாத ஒருவரை நியமிக்க எடுத்த தீர்மானம், பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புகளையும் கருத்துகளையும் தொடர்ந்து மீளாய்வு செய்யப்பட்ட நிலையில், அந்த நியமனம் இடைநிறுத்தப்பட்டது.
தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜித்தா போன்ற மத மற்றும் சமூக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இடத்திற்கு உரிய பிரதிநிதி நியமனம் அவசியம் என வலியுறுத்தி வெளிவிவகார அமைச்சின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, வெளிவிவகார அமைச்சு எடுத்த இறுதி தீர்மானத்தின் பேரில், நீண்ட கால சட்ட அனுபவமும் நிர்வாகத் திறனும் கொண்ட ஓய்வுபெற்ற நீதிபதி லஃபார் தாஹிர் அவர்களை ஜித்தாவிற்கான இலங்கை கவுன்சிலர் ஜெனரலாக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நியமனம், வெளிநாட்டிலுள்ள இலங்கை குடிமக்களின் நலன்களையும், இரு நாடுகளுக்கிடையிலான தூதரக உறவுகளையும் மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.













Discussion about this post