
Reported by Fathima Sajeeha
பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து கட்டமைப்பு வழமைக்குத் திரும்பும் வரை 2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.நாட்டினுள் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை மற்றும் சில மாகாணங்களில் பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து கட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள சேதங்களைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கமைய கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது,2026 ஆம் ஆண்டில் 5 – 13 வரையான தரங்களுக்கான பாடசாலை நேரம் மு.ப 7.30 முதல் பி.ப 1.30 வரை மாற்றமின்றி தொடரும்.
அரச, அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்கள் 2026 ஆம் ஆண்டின் முதலாம் தவணைக்காக ஜனவரி 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.தரம் 6 முதல் தரம் 13 வரை ஒரு நாளுக்கான பாடவேளைகளின் எண்ணிக்கை 7 ஆகும்.ஒரு பாடவேளைக்காக 45 நிமிடங்கள் ஒதுக்கப்படும்.
தரம் 1 இற்கான மாணவர்களை அறிமுகப்படுத்தும் செயற்பாடு 2026 ஜனவரி 5 ஆம் திகதி ஆரம்பமாவதுடன், உத்தியோகபூர்வமாக கல்வி நடவடிக்கைகள் 2026 ஜனவரி 29 ஆம் திகதி ஆரம்பமாகும்.2025 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதி 2026 ஜனவரி 12 முதல் 20 ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளது.












Discussion about this post