
Reported by Fathima Sajeeha
கம்பஹா சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரி பரிசளிப்பு விழாவில், ஒரு மாணவி பெற்றோர் மற்றும் அதிதிகள் முன்னிலையில் மேடையிலேயே அதிபரை கடுமையாக விமர்சித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.தேசிய மற்றும் சர்வதேச ஸ்குவாஷ் போட்டிகளில் கல்லூரிக்குப் பெருமை சேர்த்த தமக்கு வழங்கப்பட வேண்டிய விருது, ஒரு ஒத்திகைக்கு வராத காரணத்தால் அநீதியாக தடுத்து நிறுத்தப்பட்டதாக மாணவி குற்றம் சுமத்தியுள்ளார். அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பதே கல்லூரி மாணவிகளின் தன்மை எனவும் அவர் தெரிவித்தார்.சனித்மா செனலி என்ற மாணவியின் இந்த உரை சமூக ஊடகங்களில் வைரலாகி, மாறுபட்ட கருத்துகளை உருவாக்கியுள்ளது.













Discussion about this post