
Reported by Fathima Sajeeha
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் ‘Rebuilding Sri Lanka’ திட்டத்தின் கீழ் மாவட்ட அளவில் திட்டமிடப்பட்டுள்ள வேலைத் திட்டங்கள் மற்றும் பிரச்சினைகள் ஆராயப்பட்டன.
வீடுகளை சுத்தம் செய்ய 25,000 ரூபா, உபயோகப் பொருட்கள் வாங்க 50,000 ரூபா உதவித்தொகை டிசம்பர் 31க்கு முன் வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி அறிவுறுத்தினார். வீடு, பயிர் சேத இழப்பீட்டுத் தொகை வழங்கல் விரைவாக்கப்படும். மக்களை மீள்குடியேற்றுவதற்கான காணிகள் அடையாளம் காணப்படும். அதிக ஆபத்துள்ள பகுதிகளில் இருந்து மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும். இழப்பீடு வழங்கலில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.













Discussion about this post